5 லட்சம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை: ஜோ பிடனின் முதல் திட்டம்!

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபிடன் அவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஐந்து லட்சம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க ஜோபிடன் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

டிரம்பின் நான்காண்டு கால ஆட்சியில் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தியா உட்பட வெளிநாட்டு நபர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குவதில் டிரம்ப் அரசு ஆர்வம் காட்டவில்லை

trump

அதுமட்டுமின்ற இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஜோபிடன் அதிபரானதும் அப்படியே தலைகீழாக மாறும் என தெரிகிறது முதல்கட்டமாக ஜோபிடன் அதிபர் ஆனதும் 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜோபிடன் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி காரணமாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

ஜோபிடன் ஆட்சியில் இந்தியர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுவதால் இந்திய அமெரிக்க உறவு வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளுடனும் இணக்கமான சூழலை மேம்ப்டுத்த ஜோபிடன் அரசு விருப்பம் கொள்ளும் என்ற செய்தியால் உலக நாடுகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

From around the web