டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

டிசம்பர் மாதம் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமைச்சர் கே என் நேரு
 
vote

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த படி நம் தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மேலும் முதன்முறையாக நம் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான மு க ஸ்டாலின். மேலும் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் பெரும்பாலும் அந்த துறைகளில் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர்.nehru

இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்றது என்றே கூறலாம். ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆட்சியில் தொடங்கி நடை பெறவில்லை என்றே கூறலாம். அதனால் தமிழகத்தில் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் உள்ளாட்சி  தேர்தல் நடைபெற வில்லை என்றே கூறலாம். இந்த சூழலில் தற்போது அமைச்சர் ஒருவர் டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக  கூறினார்.

தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் கே என் நேரு நம்பிக்கை தெரிவித்துள்ளார். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் சென்னையில் அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம் மகனுக்கு மகளிருக்கு இட ஒதுக்கீடு போன்றவற்றில் குற்றச்சாட்டு உள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

From around the web