ஊரடங்கு நீட்டிப்பா?! அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை தொடங்கியது…

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாய், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25ந்தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 18 நாட்கள் ஆகிவிட்டன,
 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாய், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25ந்தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்
பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 18 நாட்கள் ஆகிவிட்டன, என்றாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இது தொடர்பாக கடந்த 8ந்தேதி பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய போது, அவர்களில் பெரும்பாலானவர்கள் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்தனர். தேசிய தொற்றுநோய் மருத்துவக்குழுவும் மேலும் 15 நாள் ஊரடங்கு சட்டத்தினை நீட்டிக்க பரிந்துரை செய்துள்ளது.

பெரும்பாலான மாநில முதல் அமைச்சர்களும், மருத்துவ நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பை எதிர்பார்க்காமல், ஒடிசா, முதல்- மந்திரி நவீன் பட்நாயக் தங்கள் மாநிலத்தில் ஊரடங்கு வருகிற 30ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி வழியே நடைபெறும் ஊரடங்கு நீட்டிப்பு பற்றிய ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில முதல் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களிடம், நாட்டில் சமூக நெருக்கடி நிலை போன்ற ஒரு சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், ஒவ்வொருவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதால் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் மோடி உரையாற்றினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல் மந்திரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

ஊரடங்கு சட்டம் நீடிக்குமா என்பது இன்று மாலை அதிகாரப்பூர்வமாய் அறிவிப்பு வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web