ரூ.3 லட்சத்தில் செய்யப்பட்ட தங்க மாஸ்க் அணிந்து வலம் வரும் தொழிலதிபர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி கண்டுபிடிக்க மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் வரையும், தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரையும் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் இருக்குமாறு மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் இந்த நிலையில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் மாஸ்க் என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்ட நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச்
 

ரூ.3 லட்சத்தில் செய்யப்பட்ட தங்க மாஸ்க் அணிந்து வலம் வரும் தொழிலதிபர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி கண்டுபிடிக்க மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் வரையும், தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரையும் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் இருக்குமாறு மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் மாஸ்க் என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்ட நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் குரேட் என்பவர் தங்கத்திலான மாஸ்க் அணிந்துள்ளார்

தங்கத்தின் மீது மிகவும் ஆர்வம் உடைய இந்த தொழில் அதிபர் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்திலான மாஸ்க்கை அணிந்து வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார், இந்த மாஸ்க்கில் சின்னச் சின்ன ஓட்டைகள் இருப்பதாகவும் இதனால் தனக்கு சுவாசத்தில் பிரச்சனை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்

ஆனால் அதே நேரத்தில் இந்த தங்க மாஸ்க் கொரோனாவில் இருந்து அவரை பாதுகாக்காது என்று மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து நெட்டிசன்கள் கூறியபோது தங்க மாஸ்க்கால் அவருக்கு விளம்பரம் கிடைக்குமே தவிர கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்காது என தெரிவித்துள்ளனர்

எனவே மற்ற தங்க அணிகலன்களை அணிந்தாலும் பாதுகாப்பான மாஸ்க் அணிந்து அவர் தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

From around the web