ஜாதி மாறி திருமணம் செய்த காதல் ஜோடிக்கு கோமியம் குடிக்கும் தண்டனை: அதிர்ச்சி தகவல்

ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட கலப்புமண தம்பதிக்கு கோமியம் குடிக்கும் தண்டனையை உபி மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து ஒன்றை அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 21ம் நூற்றாண்டிலும் ஆங்காங்கே ஜாதிக்கொடுமை இருந்து வருவதும் காதல் ஜோடிகள் ஜாதி மாறி திருமணம் செய்து கொள்வதை எதிர்த்து வருவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் காதல் ஜோடி ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு
 
ஜாதி மாறி திருமணம் செய்த காதல் ஜோடிக்கு கோமியம் குடிக்கும் தண்டனை: அதிர்ச்சி தகவல்

ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட கலப்புமண தம்பதிக்கு கோமியம் குடிக்கும் தண்டனையை உபி மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து ஒன்றை அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

21ம் நூற்றாண்டிலும் ஆங்காங்கே ஜாதிக்கொடுமை இருந்து வருவதும் காதல் ஜோடிகள் ஜாதி மாறி திருமணம் செய்து கொள்வதை எதிர்த்து வருவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் காதல் ஜோடி ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு இருவரின் பெற்றோர்கள் உள்பட கிராம பஞ்சாயத்தும் எதிர்ப்பு தெரிவித்தது.. இதனை அடுத்து இந்த தம்பதியை அந்த பகுதியில் பஞ்சாயத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது

இந்த நிலையில் மீண்டும் தங்களை ஊரில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என காதல் ஜோடி கோரிக்கை விடுத்த நிலையில் இருவரும் கோமியத்தை குடித்தால் ஊரில் சேர்த்துக் கொள்வதாக பஞ்சாயத்து நிபந்தனை விதித்தது

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்த காதல் ஜோடி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளது காவல் துறை அதிகாரிகள் பஞ்சாயத்து இயக்கத்தினரை அழைத்து இந்த தம்பதியை ஊரில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் கைது நடவடிக்கை தொடரும் என எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web