மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்: மகன் அறிவிப்பு

 

மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ராம் விலாஸ் பஸ்வான் சற்றுமுன் காலமானதாக அவரது மகன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் இன்று காலமானார். அவருக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதும், அதன்பின்னர் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய நிலையில் திடீரென இன்று உயிரிழந்தார் எனவும் ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘அப்பா நீங்கள் இப்போது இந்த உலகில் இல்லை, ஆனால் நீங்கள் எங்கே இருந்தாலும் என்னருகே இருப்பீர்கள் என நான் நம்புகிறேன். உங்களை மிகவு மிஸ் செய்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web