"மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு கொரோனா" :பரிசோதனையில் கொரோனா உறுதி!

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு பரிசோதித்து பார்த்ததில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது!
 
"மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு கொரோனா" :பரிசோதனையில் கொரோனா உறுதி!

மக்கள் மத்தியில் தற்போது வசைச் சொல்லாக மாறியுள்ளது கொரோனா வைரஸ். இந்தக் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை நாளுக்கு நாள் வீரியம் உள்ளதாக உருவெடுத்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் மத்திய அரசின் சார்பில் பல்வேறு மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் இன்றைய தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது.

corona

மேலும் அண்டை மாநிலமான கேரளத்தில் இன்றைய தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட  உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஒரே நாளில் கொரோனா 10000கடந்து மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில்லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டதாகவும் தமிழகத்தின் சார்பில் நேற்றைய தினம் கூறப்பட்டது.  தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் பரிசோதனைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதில் பலருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆவார்.  மத்திய அமைச்சர் கொரோனா இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. மேலும் அவர் தன்னை சந்தித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுபோன்று பல மாநிலங்களின் முதல்வர்களும் ஒரு சில தினங்களாக பரவி வருவது வேதனை அளிக்கிறது.

From around the web