ஈரான் நாட்டில் விமான விபத்து: அமெரிக்காவின் சதியா?

ஈரான், அமெரிக்கா இடையே போர் பதட்டம் உள்ள சூழ்நிலையில் ஈரான் நாட்டின் விமானமொன்று விபத்துக்குள்ளாகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஈரான் தலைநகர் டெஹ்ரான் என்ற நகரிலிருந்து உக்ரைன் நாட்டில் விமானமொன்று 180 பயணிகளுடன் இன்று காலை கிளம்பியது. அந்த விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் திடீரென விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 180 பயணிகளின் கதி என்ன என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை இந்த நிலையில் இன்று அதிகாலை ஈராக் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள்
 
ஈரான் நாட்டில் விமான விபத்து: அமெரிக்காவின் சதியா?

ஈரான், அமெரிக்கா இடையே போர் பதட்டம் உள்ள சூழ்நிலையில் ஈரான் நாட்டின் விமானமொன்று விபத்துக்குள்ளாகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஈரான் தலைநகர் டெஹ்ரான் என்ற நகரிலிருந்து உக்ரைன் நாட்டில் விமானமொன்று 180 பயணிகளுடன் இன்று காலை கிளம்பியது. அந்த விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் திடீரென விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 180 பயணிகளின் கதி என்ன என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை

இந்த நிலையில் இன்று அதிகாலை ஈராக் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் மீது ஈரான் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதில் ஈராக் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த தாக்குதலுக்கு பழி வாங்கவே ஈரானில் இருந்து கிளம்பிய விமானம் தாக்கப்பட்டதா? அல்லது உண்மையாகவே விபத்துக்குள்ளானதா? என்பது குறித்து ஈரான் நாட்டு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்

ஈரான் ஈராக் மற்றும் அமெரிக்காவில் போர் பதட்டம் இருந்து வரும் சூழ்நிலையில் 180 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web