குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: சசிகலா தற்கொலை குறித்து உதயநிதி

செங்கல்பட்டு மாவட்டம் நயினார் குப்பம் என்ற பகுதியை சேர்ந்த சசிகலா என்ற பெண்ணை இரண்டு சகோதரர்கள் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து சசிகலா என்ற அந்த பெண் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் பொங்கி எழுந்தனர். சசிகலாவின் தற்கொலைக்கு காரணமானவர்களில் ஒருவர் திமுகவின் நிர்வாகி என்பதால் திமுகவுக்கு எதிரானவர்கள் சமூகவலைதளத்தில் பொங்கி எழுந்தனர்
 

குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: சசிகலா தற்கொலை குறித்து உதயநிதி

செங்கல்பட்டு மாவட்டம் நயினார் குப்பம் என்ற பகுதியை சேர்ந்த சசிகலா என்ற பெண்ணை இரண்டு சகோதரர்கள் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து சசிகலா என்ற அந்த பெண் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் பொங்கி எழுந்தனர். சசிகலாவின் தற்கொலைக்கு காரணமானவர்களில் ஒருவர் திமுகவின் நிர்வாகி என்பதால் திமுகவுக்கு எதிரானவர்கள் சமூகவலைதளத்தில் பொங்கி எழுந்தனர்

ஜெயப்பிரியா மரணத்திற்கு நீதி கேட்டு போராடி திமுகவினர் சசிகலா மரணத்திற்கு மௌனமாக இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நைனார்குப்பம் #சசிகலா தற்கொலையில் சந்தேகம் மற்றும் மிரட்டபட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் நிலையில் உண்மையான குற்றவாளிகளை (எங்கள் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும்)
கண்டறிந்து உரிய தண்டனை வழங்கபட வேண்டும்

அதேபோல் திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு நைனார்குப்பம் சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்கவேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை திமுக இளைஞரணி வலியுறுத்தும்

இந்த இரண்டு நாடுகளும் தற்போது டுவிட்டர் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web