தைரியம் இருந்தால் என் வீட்டில் ரெய்டு நடத்தட்டும் சவால் விடுக்கும் உதயநிதி!

பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கிளை செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள்!
 
தைரியம் இருந்தால் என் வீட்டில் ரெய்டு நடத்தட்டும் சவால் விடுக்கும் உதயநிதி!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் வேலைப்பாடுகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவிடப்படுகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன.இந்த 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக உடன் கூட்டணியாக தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

dmk

திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார் . அவர்  தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்த சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக களமிறங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றைய காலை அவரது சகோதரியான செந்தாமரையின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது .அதற்காக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறினார், தைரியம் இருந்தால் என் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தட்டும் என்று கூறி தனது வீட்டு முகவரியையும் பிரச்சாரத்தில் கூறினார். மேலும் பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கிளை செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள் எனவும் அவர் பிரச்சாரத்தில் கூறினார்.

From around the web