விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உதயநிதி: பாமகவினர் திடீர் எதிர்ப்பால் பரபரப்பு

நீட் தேர்வு பயம் காரணமாக நேற்று தற்கொலை செய்துகொண்ட விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முயன்ற போது அங்கிருந்த பாமகவினர் உதயநிதிக்கு எதிராக கோஷமிட்டதோடு அவரை விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது 

நேற்று அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி என்ற கிராமத்தில் நீட் தேர்வு பயம் காரணமாக விக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் பாமகவினர் அதிகம் என்பதால் பாமக தனது தரப்பிலிருந்து ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்தது 

முன்னதாக தமிழக முதல்வர் ரூபாய் 7 லட்சம் நிதியுதவி மற்றும் விக்னேஷ் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை என்று அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விக்னேஷ் மரணம் அரசியலாக்கப்பட்டுள்ளதை அடுத்து திமுக உடனடியாக உதயநிதியை அனுப்பி அஞ்சலி செலுத்த வைத்தது

விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த உதயநிதி சென்றதை அடுத்து பாமகவினர் அவருக்கு அனுமதி மறுத்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள திமுக மற்றும் பாமக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web