கோழிக்கோடு விமான விபத்து: டெல்லி, மும்பையில் இருந்து மீட்பு விமானங்கள் விரைந்தன!

நேற்று இரவு துபாயிலிருந்து 191 பயணிகளுடன் கேரளா வந்த விமானம் ஒன்று திடீரென தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த விமான விபத்தில் 15 பேர் வரை பலியாகி உள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த நிலையில் பலியான விமான பயணிகள், காயம் அடைந்த விமான பயணிகளை மீட்க மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். கேரள முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் கேரளாவில் உள்ள மீட்பு படையினர் உடனடியாக விரைந்து
 

கோழிக்கோடு விமான விபத்து: டெல்லி, மும்பையில் இருந்து மீட்பு விமானங்கள் விரைந்தன!

நேற்று இரவு துபாயிலிருந்து 191 பயணிகளுடன் கேரளா வந்த விமானம் ஒன்று திடீரென தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த விமான விபத்தில் 15 பேர் வரை பலியாகி உள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் பலியான விமான பயணிகள், காயம் அடைந்த விமான பயணிகளை மீட்க மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். கேரள முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் கேரளாவில் உள்ள மீட்பு படையினர் உடனடியாக விரைந்து உள்ளனர் என்பதும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதமாக கவனித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் மத்திய அரசும் மீட்பு பணியில் இறங்கியுள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் இருந்து இரண்டு விமானங்கள் உடனடியாக மீட்புப் பணிக்காக கேரளா சென்று உள்ளது. அதில் உள்ள மீட்புப் படையினர் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்

அதுமட்டுமின்றி காயமடைந்த மற்றும் பலியாகிய குடும்பத்தினருக்கு தேவையான தகவல்கள் மற்றும் உதவிகள் கிடைக்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

From around the web