தமிழக முதலமைச்சருடன் இரு அமைச்சர்கள் ஆலோசனை!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் பலர் ஆலோசனையில் உள்ளனர்
 
stalin

தற்போது தமிழகத்தில் முதல்வராக உள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான மு க ஸ்டாலின். முதன் முறையாக முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பத்தாண்டுக்கு பின்னர் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தான் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.anbil mahesh

அவர் மக்களுக்கு பணிபுரியும் வேண்டும் என்று அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமித்துள்ளார். அமைச்சர்கள் பலரும் அவர்கள் துறையில் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர். சில அமைச்சர்கள் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் சில முக்கிய அறிவிப்புகள் குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்தப்படி பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆலோசனையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. காவேரி நதிநீர் ஆணையக் கூட்டம்-மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இது தெரியவந்துள்ளது.

From around the web