பாஜகவில் இணைந்தனர் இரண்டு காங்கிரஸ் பிரபலங்கள்

 

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமசிவாயம் திடீரென தனது அமைச்சர் பதவியையும் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் விரைவில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது

நமசிவாயம் மட்டுமின்றி மேலும் மேலும் அவரது ஆதரவாளரான எம்.எல்.ஏ ஒருவரும் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தீபாய்ந்தான் ஆகிய இருவரும் டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர் 

namasivayam

இதனை அடுத்து வரும் தேர்தலில் பாஜக சார்பில் இவர்கள் இருவரும் புதுவையில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பிரபலங்கள் திடீரென பாஜகவில் இணைந்துள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இப்போதைக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web