"ட்விட்டர்"இதுதான் உனக்கு கடைசி! இந்திய அரசு இறுதி எச்சரிக்கை!!

சமூக தொழில் நுட்ப உடன்பட விட்டால் ட்விட்டர் மீது  சட்ட விதிகளுக்கு உள்ளாக நேரிடும் இந்திய அரசு இறுதி எச்சரிக்கை
 
twitter

தற்போது நம்மிடையே சமூக வலைதளங்கள் அதிகமாக உருவாகின்றன. முன்னொரு காலத்தில் ஃபேஸ்புக் மட்டுமே அனைவராலும் பேசப்படும் அதுவே மிகவும் சிறந்ததாக காணப்பட்டது. இந்நிலையில் பேஸ்புக் அடுத்ததாக மக்கள் அனைவரிடமும் பல்வேறு மொபைல் அப்ளிகேஷன் நடைமுறைக்கு வந்துள்ளன. உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் அதிகம் பயன்படுத்துகிறது. அவற்றில் மிகவும் குறிப்பா வாட்ஸ்அப், ட்விட்டர் ,இன்ஸ்டாகிராம் போன்றவைதான்.twitter

இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்திய அரசு தனது டிக் டாக் அப்ளிகேஷனை இயக்க ரத்து செய்திருந்தது. அவை இன்றளவும் இந்தியாவில் தடை செய்து காணப்படுகின்ற நிலையில் தற்போது இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மொபைல் அப்ளிகேஷன் ட்விட்டருக்கு இறுதி எச்சரிக்கை இந்திய அரசு விடுத்துள்ளது. அதன்படி தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு உடன்பட விட்டால் ட்விட்டர் மீது சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று இந்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் டுவிட்டர் சமூக வலைதளம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க மத்திய அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது. மேலும் அவர்கள் இருமுறை அறிக்கை அனுப்பியும் ட்விட்டர் அளித்த பதில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் திகைப்பூட்டும் வகையில் உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. மேலும் சமூக வலைத்தளத்தில் மூன்றாமவரால் விடப்படும் பதிவுகளுக்கு நிறுவனம் பொறுப்பேற்றதில் இருந்து விலக்க அளிக்கப்படாது என்றும் எச்சரித்துள்ளது இந்திய அரசு. இதனால் இந்தியா ஆடிட்டர் நிறுவனத்திற்கு தற்போது இறுதிகட்ட எச்சரிக்கை விடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

From around the web