ட்விட்டர் லோகோ இனி கருப்பு நிறம்தான்.. அமெரிக்க அரசுக்கு எதிராக எதிர்ப்பு காட்டும் ட்விட்டர்!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பாதிப்பின் உச்ச நிலையில் அமெரிக்காவில் உள்ள நிலையிலும், மக்கள் நீதி கேட்டு நியூயார்க், டெட்ராய்ட், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ், ஆஸ்டின் மற்றும் போர்ட்லேண்ட் போன்ற இடங்களில் தீவிரமாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்
 
ட்விட்டர் லோகோ இனி கருப்பு நிறம்தான்.. அமெரிக்க அரசுக்கு எதிராக எதிர்ப்பு காட்டும் ட்விட்டர்!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா பாதிப்பின் உச்ச நிலையில் அமெரிக்காவில் உள்ள நிலையிலும், மக்கள் நீதி கேட்டு நியூயார்க், டெட்ராய்ட், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ், ஆஸ்டின் மற்றும் போர்ட்லேண்ட் போன்ற இடங்களில் தீவிரமாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நாய்களை ஏவ வைத்திருப்பேன் என ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ள சம்பவம் அங்கு மட்டுமல்லாது உலகின் பலநாடுகளிலும் உள்ள மக்களிடையே அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் லோகோ இனி கருப்பு நிறம்தான்.. அமெரிக்க அரசுக்கு எதிராக எதிர்ப்பு காட்டும் ட்விட்டர்!

இந்தநிலையில், மே 31 ஆம் தேதி வெள்ளை மாளிகை முன்பு கருப்பின மக்கள் பலரும் போராட்டத்தினைத் துவக்கினர்., போராட்டத்தை நிறுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதாக அரசு தரப்பில் தகவல் வெளியானாலும், போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

இந்த நிலையில் கருப்பினத்தவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ட்விட்டர் நிறுவனம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், அதன் லோகோவின் கலரான ப்ளூ நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாற்றி அமெரிக்க அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது.

மேலும் தங்களது பயோவில் #BlackLivesMatter என்று குறிப்பிட்டுள்ளது

From around the web