விதிகளை பின்பற்றாவிட்டால் டுவிட்டருக்கு தடை விதிக்கலாம்: நீதிமன்றம் அதிரடி

 
twitter

மத்திய அரசின் புதிய ஐடி சட்டங்களுக்கு டுவிட்டர் கட்டுப்பட வேண்டும் என்றும் கட்டுப்படவில்லை என்றால் ட்விட்டருக்கு அரசு தடை விதிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஐடி விதிமுறைகளை சமூகவலைதளங்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதோடு 3 மாத அவகாசம் கொடுக்கப்பட்டது. மே 25-ம் தேதியுடன் இந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்பட பல சமூக வலைதளங்கள் மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு ஒப்புக்கொண்டுள்ளன

ஆனால் டுவிட்டர் மட்டும் இந்த சட்டத்திற்கு கட்டுப்படுவதாக இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது டுவிட்டரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புதிய நெறிமுறைகளை நாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் விசாரணை அதிகாரியை நியமித்து உள்ளதாகவும் தெரிவித்தது

ஆனால் மத்திய அரசு வழக்கறிஞர் விசாரணை அதிகாரியை டுவிட்டர் நிறுவனம் இன்னும் நியமிக்கவில்லை என்று தெரிவித்தது. இதனையடுத்து நீதிபதி டுவிட்டர் நிறுவனம் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அந்நிறுவனத்திற்கு தடை விதிக்கலாம் என்றும் குறிப்பிட்டதோடு இந்த மனு குறித்து பதிலளிக்க மத்திய அரசு மற்றும் டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web