மத்திய அரசின் உத்தரவால் அதிர்ந்த ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை!

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகளை நியமித்து உள்ளது ட்விட்டர் நிறுவனம்
 
twitter

நம் இந்தியாவில் கடந்த ஆண்டு சீனாவின் அனைத்து அப்ளிகேஷன்களும் முடக்கப்பட்டன. மேலும்  அதனை பதிவிறக்கவும் தடை செய்யப்பட்ட நிலையில் சில தினங்களாக நம் இந்தியாவில் அதிகமாக ட்விட்டர் அப்ளிகேஷனுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வந்தன, மேலும் இந்திய அரசானது இறுதிக்கட்ட எச்சரிக்கையையும் ட்விட்டர் நிறுவனத்திற்கு தெரிவித்திருந்தது. மேலும் அதனை பின்பற்ற விட்டாள் இந்தியாவில் ட்விட்டர் இயங்காது என்றும் கூறியிருந்தது தெரிய வந்ததுதான்.twitter

இந்நிலையில் தற்போது இந்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து ட்விட்டர் நிறுவனமானது தகுந்த நடவடிக்கை எடுத்ததாக காணப்படுகிறது. அதன்படி புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகளை நியமித்துள்ளது ட்விட்டர் நிறுவனம். மேலும் சிறப்பு தொடர்பு அதிகாரி மற்றும் உள்நாட்டு குறைதீர் அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் ட்விட்டர் நிறுவனம் நியமித்துள்ளது. மேலும் அந்த பொறுப்புகளுக்கான நிரந்தர நியமனம் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசுக்கு ட்விட்டர் நிறுவனம் பதில் அனுப்பி உள்ளது.

மேலும் தலைமை சட்ட இணங்க அதிகாரிகளை நியமனம் செய்வதற்கான இறுதிகட்டத்தில் தாங்கள் உள்ளோம் என்றும் டுவிட்டர் நிறுவனம் தனது பதிலில் கூறியுள்ளது. இதனால் இந்திய அரசிற்கு இத்தகைய பதில்கள் மூலம் தெரிவித்ததால் இந்திய அரசின் விதிகளுக்கு ட்விட்டர் நிறுவனம் இணங்கும் என்றும் அதனைப் பின்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் தடை செய்யப் படாது என்றும் அனைவராலும் நம்பப்படுகிறது.

From around the web