தீய சக்திக்கும் துரோக சக்திக்கும் முடிவு கட்ட வேண்டும் கூறும் டிடிவி!

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  இந்த தேர்தலோடு ஓய்வெடுப்பது நல்லது என்று கூறும் டிடிவி!
 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் மத்தியில் தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதா சாகு. தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. அதன்படி தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி கூட்டணியாக பாஜக மற்றும் பாமக கட்சி வைத்துள்ளது.

ammk

மேலும் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக கட்சி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர்  கட்சி கூட்டணியிலிருந்து விலகினார். விலகின சில நாட்களில் அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் அமமுக கட்சியில் இணைந்தார். அதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

 அமமுக கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். தமிழகத்தின் பல பகுதிகள் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் சென்ற போது அவர் கூறினார். தீய சக்திக்கும் துரோக சக்திக்கும் முடிவு கட்ட வேண்டுமென  அவர் கூறினார். மேலும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த தேர்தலோடு ஓய்வெடுப்பது நல்லது என்றும் கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பிரச்சாரத்தில் கூறினார்.

From around the web