தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும் டிடிவி தினகரன் நம்பிக்கை!

தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும் மக்கள் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்று காலை தொடங்கியது.காலை முதலே வாக்குப் பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வாக்காளர் அனைவரும் காலை முதலில் சென்று வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்.  தேர்தல் அதிகாரிகள் மிக கவனத்துடன் வாக்காளர்களை கண்காணித்து வருகின்றனர். மேலும் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு  மிகவும் கவனமாக நடைபெற்று வருகிறது.வாக்காளர்களுக்கு முகக்கவசம், கையுறை போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது.

ammk

மேலும் அவர்களின் உடல் வெப்ப நிலையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இதை தொடர்ந்து தமிழில் உள்ள பல பிரபலங்கள்  வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது வாக்கினை சென்னை அடையாறு தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார் பின்னர் பேட்டியளித்துள்ளார்.

அதன்படி தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும் எனவும் மக்கள் அதை உருவாக்குவார்கள் எனவும் நம்பிக்கை விடுத்துள்ளார்.. மேலும் தீய சக்திகளை மக்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள் எனவும் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் சில இடங்களில் வேட்பாளர்கள் விலைக்கு வாங்கப்பட்டது உண்மை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அழைக்கப்படும் தேமுதிக கூட்டணியில் அமமுக வினர் சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web