கள்ளச்சந்தையில் வாங்க முயற்சி; மக்கள் கூச்சல்; உடனே வெளியேறினார்!

ரெம்டிசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் வாங்கும் முயற்சித்தபோது மக்கள் கூச்சலிட்ட தாக கூறப்படுகிறது!
 
கள்ளச்சந்தையில் வாங்க முயற்சி; மக்கள் கூச்சல்; உடனே வெளியேறினார்!

தற்போது நாடெங்கும் அதிகமாக பேசப்படும் வார்த்தையாக கொரோனா என்ற வார்த்தை உள்ளது. இது வார்த்தையாக மட்டுமில்லாமல் பல்வேறு நபர்களின் வாழ்க்கையை பாழக்குபோவதாகவும் உள்ளது. காரணம் இந்தக் கொரோனாவானது கண்ணுக்கே தெரியாமல் மனிதனின் உடலுக்குள் புகுந்து மனிதனின் உடலை மரணத்திற்கு கொண்டு செல்கிறது. உயிர்க்கொல்லி நோய் கொரோனாவை கடந்த ஆண்டு இந்தியா கட்டுப்படுத்தியது. தற்போது இந்த இரண்டாம் அலை நாடெங்கும் மீண்டும் எழுந்துள்ளது ,இதற்கு எதிராக மிகவும் போராடி வருகிறது.remdesivir

இன்னும் மத்திய அரசின் சார்பில் பல்வேறு தடுப்பூசிகளும் பல மாநிலங்களில் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன. ரெம்டிசிவிர்  என்ற தடுப்பூசியும் பல்வேறு மாநிலங்களுக்கு உள்ள மருத்துவமனைகளில் கொடுக்கப்படுகின்றன. மேலும் இந்த ரெம்டிசிவிர்  மருந்தினை குறித்து கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டிருந்தது .தற்போது தமிழகத்தில்இந்த மருந்து கள்ளச் சந்தையில் வாங்க முயன்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது .சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டிசிவிர்  கள்ளச் சந்தையில் வாங்கும் முயற்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. வரிசையில் பலர் மருந்து வாங்க நிற்கும்போது 10 பேர் மட்டும் கவுண்டர் உள்ளே சென்று இந்த ரெம்டிசிவிர்  மருந்தினை வாங்க முயன்றனர். இதனால் பொதுமக்கள் கூச்சல் இடத்தை தொடர்ந்து கவுண்டரில் இருந்த 10 பேருக்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

From around the web