போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவ வைத்திருப்பேன்.. ட்ரம்ப் பேச்சு!!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பாதிப்பின் உச்ச நிலையில் அமெரிக்காவில் உள்ள நிலையிலும், மக்கள் நீதி கேட்டு நியூயார்க், டெட்ராய்ட், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ், ஆஸ்டின் மற்றும் போர்ட்லேண்ட் போன்ற இடங்களில் தீவிரமாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்
 
போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவ வைத்திருப்பேன்.. ட்ரம்ப் பேச்சு!!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா பாதிப்பின் உச்ச நிலையில் அமெரிக்காவில் உள்ள நிலையிலும், மக்கள் நீதி கேட்டு நியூயார்க், டெட்ராய்ட், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ், ஆஸ்டின் மற்றும் போர்ட்லேண்ட் போன்ற இடங்களில் தீவிரமாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவ வைத்திருப்பேன்.. ட்ரம்ப் பேச்சு!!

வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நாய்களை ஏவ வைத்திருப்பேன் என ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ள சம்பவம் அங்கு மட்டுமல்லாது உலகின் பலநாடுகளிலும் உள்ள மக்களிடையே அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நேற்று முன் தினம் (மே 29 ஆம் தேதி) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்துப் பேசிய ஜனாதிபதி டிரம்ப், “வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டதைக் கலைக்குமாறு நான் கூறியபோதும் அவர்கள் அங்கிருந்து கிளம்பியபாடில்லை. அவர்களது போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கொடூரமான நாய்களை ஏவச் செய்யவோ, துப்பாக்கிக் குண்டுகள் மூலம் பதம் பார்த்திருக்கவோ செய்திருப்பேன்.

ஆனால் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் மிகவும் சிறப்பான முறையில் போராட்டக்காரர்களை அடக்கினர். அதனால் அதற்கான வாய்ப்பை ஏற்படவில்லை. போராட்டக்காரர்களும் வெறும் கூச்சலோடு வீடு திரும்பினர்” என்று கூறியுள்ளார்.

From around the web