வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேற்றப்படுவார்: ஜோபைடன் எச்சரிக்கை!

 

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் கடந்த 3 நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கிட்டத்தட்ட ஜோ பைடன் வெற்றி பெற்று விட்டார் என்றே தெரிகிறது. இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அவர் வெற்றி பெற்றுவிட்டதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 

ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்ததை டிரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அடுத்தடுத்து சட்ட நடவடிக்கை எடுத்து காலதாமதம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற முடியாது என்று அவர் கூறி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் தோல்வி அடையும் ஒரு அதிபர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற முடியாது என்று சொல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

joe biden

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு வெள்ளை மாளிகையிலிருந்து டிரம்ப் வெளியேற விட்டால் அவர் வெளியேற்றப்படுவார் என ஜோபைடன் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிபர் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக டிரம்ப் கூறும் குற்றச்சாட்டில்  அளவு உண்மை இல்லை என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜோ பைடன் தரப்பு தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையிலிருந்து டிரம்ப் வெளியேறாவிட்டால் அவரை வெளியேற்ற அமெரிக்க அரசு அதிகாரம் உள்ளது என்றும் ஜோபைடன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

From around the web