அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அந்நாட்டில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் அவர்களும், தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அமெரிக்க தேர்தலில் தற்போது
 

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அந்நாட்டில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் அவர்களும், தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், அமெரிக்க தேர்தலில் தற்போது அதிபராக இருந்து வரும் டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் துணை அதிபராக உள்ள மைக் பென்சி அவர்களும் இரண்டாவது முறையாக போட்டியிடுவார்கள் என குடியரசுக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என்பதால் டிரம்ப் இந்த முறை மீண்டும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்றே அனைத்து கருத்துக்கணிப்புகளும் தெரிவித்து வருகின்றன.

From around the web