மீண்டும் டிரம்ப் தான் அதிபர்: பிரபல இந்திய ஜோதிடர் கணிப்பு!

 

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது என்பதும் நவம்பர் 3ஆம் தேதி பதிவு செய்யப்படும் வாக்குப்பதிவில் அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பது தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஏற்கனவே 8 கோடிக்கும் மேல் முன்கூட்டியே வாக்களித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் நவம்பர் 3ஆம் தேதி அனைத்து வாக்கு பதிவுகளும் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பது குறித்த வாத விவாதங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலை கணித்துள்ள இந்தியாவின் பிரபல ஜோதிடரான சங்கரன் திரிபாதி என்பவர் மீண்டும் அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெற்று அதிபர் ஆவார் என்று கூறியுள்ளார். ஜாதகத்தின்படி அனைத்து கிரகங்களும் டிரம்புக்கு சாதகமாக உள்ளது என்றும் எனவே அவர் மீண்டும் அதிபராவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 

இவர் ஏற்கனவே பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் ஜோதிடராக இருந்தவர் என்பதும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web