தேர்தல் அதிகாரியையே பதவி நீக்கம் செய்த டிரம்ப்!

 

அமெரிக்க தேர்தல் அதிகாரி ஒருவரை திடீரென அதிபர் டிரம்ப் நீக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தார் என்பதும், வெற்றி பெற்றுள்ள ஜோபைடன் விரைவில் அடுத்த அமெரிக்க அதிபராக பதவி ஏற்பார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் டிரம்ப். இதற்காக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

trump

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தேர்தல் அதிகாரி கிரிப்ஸ் என்பவரை திடீரென அதிபர் டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என கூறிய தேர்தல் அதிகாரி கிரிப்ஸ் கூறியதை அடுத்து அவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளார் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபரின் இந்த  நடவடிக்கைக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web