திருச்சி 9ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: அதிர்ச்சி தகவல்

திருச்சியை சேர்ந்த 14 வயது சிறுமியான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி திடீரென நேற்று மாலை எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனை அடுத்து அது கொலையாக இருக்கலாம் என்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர் இந்த நிலையில் திருச்சியில் தீயினால் எரிந்து மரணமடைந்த சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை சற்றுமுன் வெளிவந்துள்ளது. அதில் அந்த சிறுமி
 

திருச்சி 9ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: அதிர்ச்சி தகவல்

திருச்சியை சேர்ந்த 14 வயது சிறுமியான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி திடீரென நேற்று மாலை எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இதனை அடுத்து அது கொலையாக இருக்கலாம் என்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்

இந்த நிலையில் திருச்சியில் தீயினால் எரிந்து மரணமடைந்த சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை சற்றுமுன் வெளிவந்துள்ளது. அதில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்பது உறுதியாகி உள்ளது

இதனை அடுத்து அந்த சிறுமி தன்னைத்தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற ரீதியில் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சிறுமிக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்த பின்னர் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்பது மட்டுமின்றி உடலில் எந்தவிதமான காயமும் இல்லை என்பதால் இது தற்கொலையாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

From around the web