வெட்டுக்கிளிகளைப் பிடிக்கும் மின் வலைப் பொறி… திருச்சி பொறியியல் மாணவரின் சாதனை!!

கொரோனாவைத் தவிர்த்து இந்தியாவில் மற்றொரு பிரச்சினையாக வெட்டுக் கிளியும், நிசர்கா புயலும் படையெடுத்து வருகின்றன. அதாவது இந்தியாவில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பயிர்களை தின்று சேதம் விளைவித்து வருகின்றது வெட்டுக்கிளிகள். இந்தநிலையில், கடந்தவாரம் இந்த 3 மாநிலங்களைத் தாண்டி மகாராஷ்டிராவிலும் வெட்டுக்கிளிகள் உட்புகுந்து தங்களது வேலையினைக் காண்பித்து வருகின்றன. பல இடங்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் உள்நுழைவதைத் தடுக்கும்பொருட்டு தீயணைப்பு படை வீரர்கள் பூச்சி கொல்லி மருந்துகள் அடித்து ஓரளவு நிலைமையினைக் கட்டுக்குள் வைத்துள்ளனர்.
 
வெட்டுக்கிளிகளைப் பிடிக்கும் மின் வலைப் பொறி… திருச்சி பொறியியல் மாணவரின் சாதனை!!

கொரோனாவைத் தவிர்த்து இந்தியாவில் மற்றொரு பிரச்சினையாக வெட்டுக் கிளியும், நிசர்கா புயலும் படையெடுத்து வருகின்றன. அதாவது இந்தியாவில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பயிர்களை தின்று சேதம் விளைவித்து வருகின்றது வெட்டுக்கிளிகள்.

இந்தநிலையில், கடந்தவாரம் இந்த 3 மாநிலங்களைத் தாண்டி மகாராஷ்டிராவிலும் வெட்டுக்கிளிகள் உட்புகுந்து தங்களது வேலையினைக் காண்பித்து வருகின்றன. பல இடங்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் உள்நுழைவதைத் தடுக்கும்பொருட்டு தீயணைப்பு படை வீரர்கள் பூச்சி கொல்லி மருந்துகள் அடித்து ஓரளவு நிலைமையினைக் கட்டுக்குள் வைத்துள்ளனர்.

வெட்டுக்கிளிகளைப் பிடிக்கும் மின் வலைப் பொறி… திருச்சி பொறியியல் மாணவரின் சாதனை!!

தற்போது வெட்டுக்கிளிகளைக் கவரும் வகையில் திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் ஒருவர், மின் வலை பொறி கருவியை தயாரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “வெட்டுக்கிளிகள் சேதங்களை விளைவித்து விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் இவற்றினை பிடிக்கும் பொருட்டு, குறைவான செலவில் மின்வலை பொறியினை உருவாக்கியுள்ளேன்.

அதாவது மின் வலை பொறியில் குண்டு பல்பு ஒன்றினை வைத்து,  கம்பி வலையினை அமைத்து மின் இணைப்பு கொடுத்துள்ளேன். இதை வெட்டுக்கிளிகள் வரும் இடங்களில் வைத்தால், நிச்சயம் மின்சாரம் தாக்கி அழித்துவிடும்.

ஒரு ஏக்கருக்கு 4 மின் வலைப் பொறி இருந்தால் போதும், மேலும் இறந்த வெட்டுக்கிளிகளை உரமாக பயன்படுத்தினால் கூடுதல் லாபமும் கிடைக்கும்.” என்று கூறியுள்ளார்.

From around the web