ஒரு கிமீ நடந்து மர உச்சியில் உட்கார்ந்து படிக்கும் மாணவிகள்: ஏன் தெரியுமா

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. இருப்பினும் கடந்த சில வாரங்களாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன ஆனால் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகள் பல இடங்களில் மொபைல் சிக்னல் இல்லாத காரணத்தினால் மாணவ மாணவிகளால் கவனிக்க முடியவில்லை. குறிப்பாக கிராமப் புறத்தில் மொபைல் சிக்னல் சரியாக இல்லை என்பதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் அந்த வகையில் திருச்சி
 
ஒரு கிமீ நடந்து மர உச்சியில் உட்கார்ந்து படிக்கும் மாணவிகள்: ஏன் தெரியுமா

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. இருப்பினும் கடந்த சில வாரங்களாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன

ஆனால் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகள் பல இடங்களில் மொபைல் சிக்னல் இல்லாத காரணத்தினால் மாணவ மாணவிகளால் கவனிக்க முடியவில்லை. குறிப்பாக கிராமப் புறத்தில் மொபைல் சிக்னல் சரியாக இல்லை என்பதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்

அந்த வகையில் திருச்சி அருகே உள்ள மணலோடை என்ற கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மொபைல் சிக்னலுக்காக ஒரு கிலோ மீட்டர் தூரம் மலைப்பகுதியில் நடந்து மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு ஆன்லைன் பாடங்களை படித்து வருகின்றனர்

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணலோடு என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அந்த பகுதியில் உள்ள பச்சை மலை என்ற மலையில் ஏறி அங்குள்ள மரத்தின் மீது உட்கார்ந்தால்தான் மொபைல் சிக்னல் வருகிறது என்று கூறி வருகின்றனர். இதற்காக அவர்கள் தினமும் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று மலை உச்சியில் உட்கார்ந்து பாடங்களை படித்து வருகின்றனர்

அதேபோல் அந்த பகுதியை சேர்ந்த தோணுர், சின்னலப்பூர் மற்றும் மேலூர் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் ஒரு கிலோ மீட்டர் மலையேறி தான் ஆன்லைன் வகுப்புகள் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பகுதியில் உள்ள மாணவ மாணவிகளின் பெரும்பாலான பெற்றோர்கள் விவசாய வேலை செய்து வருகின்றனர் என்றாலும் என்பதும் அவர்கள் தங்கள் வறுமையையும் பாராமல் தங்கள் குழந்தைகளுக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web