கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை: தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த உச்சநீதிமன்றம்!

கொரோனா வைரஸால் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதில்லை என்றும் கொரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை சரிவர காட்டப்படுவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி கொரோனா சிகிச்சை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதன்படி கொரோனா சிகிச்சை விபரங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை கண்ணியமாக கையாளுதல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் அடக்கம் செய்தல் தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web