இறந்தவர்களோடு நோயாளிகளுக்கு சிகிச்சை! வைரலாகும் வீடியோ!

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை!
 
இறந்தவர்களோடு நோயாளிகளுக்கு சிகிச்சை! வைரலாகும் வீடியோ!

தற்போது மக்கள் மனதில் அதிகம் பேசப்படும் வாய்ச் சொல்லாக தற்போது கொரோனா காணப்படுகிறது.  கடந்த ஆண்டு இந்தியாவில் பரவத் தொடங்கி கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியா முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் தற்போது இந்த கொரோனா மீண்டும் இந்தியா முழுவதும் அதிகரித்து மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் கொரோனாக நோய்க்கு எதிராக மிகவும் போராடி வருகின்றனர். மத்திய மாநில அரசுகளும் கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக மிகவும் கடினப்பட்டு உழைக்கின்றனர்.pudhucherry

மேலும் பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு சில மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் இந்த கொரோனாவின் தாக்கம் சில தினங்களாக குறைந்து காணப்படுகிறது. எனினும் புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகம் நிரம்புவதால் அவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும் புதுச்சேரியில் தரையில் படுத்துக்கொண்டு சிகிச்சை அளித்த சம்பவம் அனைவருக்கும் கஷ்டத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்தவர்கள் உடலை பார்சல் செய்து நோயாளிகளுடன் வைத்திருக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் மக்கள் மிகவும் புலம்புகின்றனர்.

From around the web