ரயில்கள், மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் ஓடியது: பிசியான சென்னை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் எந்த போக்குவரத்தும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே மட்டும் பேருந்துகள் இயங்கியது.

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் எந்த போக்குவரத்தும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே மட்டும் பேருந்துகள் இயங்கியது.

இந்த நிலையில் இன்று முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயங்குகின்றன. இன்று அதிகாலை முதலே சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகள் ஓடத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது 

ஐந்து மாதங்களுக்கு பிறகு சென்னையிலிருந்து பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பயணம் செய்தனர். சென்னையில் இருந்து வெளி மாவட்டத்துக்கு செல்லும் பேருந்துகள் ஐந்து முப்பது மணி முதல் இயக்கப்பட்டது. பேருந்தில் பயணிகள் தனிமனித இடைவெளியுடன் பயணம் செய்து வருவதாகவும் இன்று மட்டும் 400 பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 

அதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 6.10 மணிக்கு முதல் ரயில் இயங்கியது. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் சென்னையில் இன்று காலை ஏழு முப்பது மணிக்கு மெட்ரோ ரயில்கள் ஓடத் தொடங்கின. அமைச்சர் எம்சி சம்பத் அவர்கள் மெட்ரோ ரயிலை தொடங்கி வைத்ததோடு அவரும் ரயிலில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடப்பட்டது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையில் பேருந்துகள் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் ஓடத் தொடங்கியுள்ளதால் சென்னை மீண்டும் பிசியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web