"28ஆம் தேதி 26வது முறை தொடர்ந்து வரும் தொடர்வண்டி" தமிழகத்திற்கு!!

தமிழகத்துக்கு தற்போது 26வது ஆக்சிசன் எக்ஸ்பிரஸ் வந்ததாகக் கூறுகிறது!
 
oxygen express

தற்போது நாட்டில் அதிகமாக பேசப்படும் வார்த்தையாக கொரோனா உள்ளது. காரணம் கடந்த ஆண்டு கொரோனா நோயானது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மீண்டும் நோயை அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்க மேலும் வட மாநிலங்கள் பலவற்றில் தற்போது இந்த நோயின் தாக்கம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. காரணம் என்னவெனில் அந்த மாநிலங்கள் ஆரம்ப காலத்திலேயே முழு ஊரடங்கு அமல் படுத்தியதால் தற்போது அந்த மாநிலங்களில் இந்த கொரோனா நோயின் தாக்கம் குறைவாக காணப்படுகிறது.oxygen

இருப்பினும் நம் தமிழகம் கேரளா புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இந்நோயின் பாதிப்பானது கடுமையாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் நம் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தடுப்பூசியும் மட்டுமின்றி ஆக்சிஜன் தேவைப்படுகிறது.இதனால் தற்போது தமிழகத்தில் பல தொழிற்சாலைகளில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்படுகின்றன இருப்பினும் தமிழகத்திற்கு பல்வேறு மாநில அரசுகளும் உதவி செய்து வருகின்றன

இதுவரை நம் தமிழகத்திற்கு 26 ரயில்கள் மூலம் ஆக்சிஜன்  வந்ததாக கூறப்படுகிறது. இன்றைய தினம் தமிழகத்திற்கு 26 ஆக்சிசன் எக்ஸ்பிரஸ் வந்துள்ளது. மேலும் அவை 70.31 டன் ஆக்சிஜன்யுடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது மராட்டியத்தில் டோல்வியிலிருந்து நான்கு கன்டெய்னர்களில் இந்த 70.31 மெட்ரிக் டன் ஆக்சிசன் சென்னை வந்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு இதுவரை 1553.3 மெட்ரிக் டன் ஆக்சிசன் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

From around the web