ரயிலையும் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டது!தெற்கு ரயில்வே அன்பான வேண்டுகோள்!

வெளிமாநிலங்களில் இருந்து தெற்கு ரயில்வே உட்பட்ட பகுதிகளுக்கு வரும் பயணிகள் இ பாஸ் கட்டாயம் என்று தகவல் வெளியாகி உள்ளது!
 
ரயிலையும் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டது!தெற்கு ரயில்வே அன்பான வேண்டுகோள்!

இதுவரை யாரும் கண்ணில் காணாது ஆனால் பல்வேறு வழிகளில் வாங்கியுள்ளது கொரோனா வைரஸ்.இந்த கொரோனா வைரஸ் ஆனது  சீனாவில் கண்டறியப்பட்டது. மேலும் அங்குள்ள மாகாணங்கள் அனைத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்திலும் பரிசோதித்த போது இந்த கொரோனா நோயின் தாக்கம் ஆனதே உலக மக்கள் அனைவருக்கும் இருந்தது தெரியவந்தது. உலகில் உள்ள பல நாடுகளில் மிகவும் அச்சத்துடன் இருந்தனர்.

railway

இந்தியாவில் நோய் தாக்கமானது வரத் தொடங்கியதும் இந்திய அரசானது அச்சமின்றி நாடெங்கும் முழு ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தி கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனை கண்ட மற்ற நாடுகளில் இந்தியாவின் இத்திட்டத்தினை  பின்பற்றி தங்களது நாடுகளிலும் முழு ஊரடங்கு திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார். ஆனால் தற்போது இந்தியாவில் இந்த  கொரோனா  மீண்டும் அதிகரித்துள்ளது மக்களுக்கு வேதனை அளித்துள்ளது. இதனால் குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரம், டெல்லி போன்ற மாநிலங்களில்  கொரோனா  தாக்கம் வீரியம் உள்ளதாகவும் காணப்படுகிறது.

இதனால் தமிழக அரசானது சில கட்டுப்பாட்டு விதிகளையும் தடைகளையும் விதித்திருந்தது. மேலும் வெளிமாநிலங்களில் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என்ற விதியையும் விதித்திருந்தது.  நேற்றையதினம் தெற்கு ரயில்வே வானது பயணிகளுக்கு சில வேண்டுகோளை விதித்திருந்தது. அதன்படி பயணிகள் அனைவரும் தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும்  மேலும் குழுவாக கூட்டமாக பயணம் செய்வதை தவிர்க்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளது .

மேலும் ரயில்கள் ரயில் நிலையங்களில் கை சுத்தம் போன்றவற்றினை பின்பற்றவும் மாஸ்க் அணிவது சமூக இடைவெளியை சுகாதாரம் போன்ற அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவித்திருந்தது .இந்நிலையில் தற்போது ரயில்வே  இ பாஸ் திட்டத்தை கட்டாயமாக்கி உள்ளது. மேலும் குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வரும் பயணிகளை  இ பாஸ் கொண்டுவர வேண்டும் என்றும் கூறியுள்ளது மேலும் காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் ரயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

From around the web