தொடரும் சோகம்! மகாராஷ்டிராவில் மேலும் கட்டுப்பாடுகள்!

மகாராஷ்டிரா திரையரங்குகளில் இனி 50 %பேருக்கு மட்டும் அனுமதி!
 
தொடரும் சோகம்! மகாராஷ்டிராவில் மேலும் கட்டுப்பாடுகள்!

கொரோனா பாதிப்பானது முதலில் சீனாவில் உருவானது. அதன் பின் கொரோனா பாதிப்பானது உலகமெங்கும் பரவியதாக கூறப்பட்டது. இது கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் பரவியது இதனால் இந்திய அரசானது கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. மேலும் கடந்த ஆண்டு இறுதியில் ஊரடங்கு  காணப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் திறக்கப்பட்ட நிலையில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்து வருகிறது.

corona

இதனால் தமிழக அரசு சில தினங்களுக்கு முன் மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் அமல் படுத்தியது.மேலும் மகாராஷ்டிராவிலும் கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மகாராஷ்டிராவில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் மகாராஷ்டிராவில்  நாக்பூர் பகுதியில் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் தற்போது சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அது என்னவெனில் மகாராஷ்டிராவில் உள்ள திரையரங்குகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி எனவும் கூறியது.கொரோனா அதிகரித்து வரும் நிலையில் திரையரங்குகளில் மற்றும் நிகழ்ச்சி அரங்குகளில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி என மகாராஷ்டிர அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மேலும் தனியார் அலுவலகங்களுக்கும் 50%ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கும் அரசு விதித்துள்ளது .இதனால் மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர் மேலும்  கொரோனா பாதிப்பானது பல பகுதிகளுக்கும் பரவுவதால் மக்கள் வேதனையில் உள்ளனர்.

From around the web