தொடரும் சோகம்! அதிகரிக்கும் பலி! ஒரே நாளில் 879 பேர் உயிரிழப்பு!

கொரோனா நோயினால் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 879 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!
 
தொடரும் சோகம்! அதிகரிக்கும் பலி! ஒரே நாளில் 879 பேர் உயிரிழப்பு!

மக்கள் மத்தியில் விஷக்கிருமி உயிரை குடிக்கும் என்ற பல்வேறு பெயர்களால் வழங்கப்பட்டு வருவது கொரோனா .கொரோனா  நோயானது மனிதர்களுக்கே தெரியாமல் அவர்கள் உடலுக்குள் புகுந்து அவர்களின் உயிரை வாங்கி குடிப்பது மிகவும் வேதனையான தகவலாக உள்ளது ,ஆனால் இதுவே உண்மை.சீனாவில் முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலக நாடுகளில் பரிசோதித்தபோது உலக நாடுகள் அனைத்திலும் இந்த கொரோனா நோயானது இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் உலகமே மிகுந்த அச்சத்தில் இருந்தது. மேலும் இந்த கொரோனா நோயானது இந்தியாவிலும் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வர தொடங்கியது.

corona

இந்திய அரசானது மிகவும் புத்திசாலித்தனமாக எந்த ஒரு நாடும் பின்பற்றாத முழு ஊரடங்கு திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இதனால் கொரோனா நோயானது கடந்த ஆண்டின் இறுதியில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் இந்தியாவில் சில வாரங்களாக இந்நோயின் தாக்கம் மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் இந்தியாவில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது சோகத்தை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் டெல்லி மகாராஷ்டிரம் தமிழ்நாடு பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. தாக்கம் மட்டுமின்றி இந்நோயின் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோயினால் 879 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை இந்த நோயினால் 171058 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனால் இந்தியாவில் உயிரிழபுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு மிகுந்த சோகத்தை அளித்துள்ளது.

From around the web