தொடரும் சோகம்! வாக்களிக்க விருப்பம் இல்லாத கொரோனா நோயாளிகள்!

சென்னையில் சிகிச்சை பெறும் 8991 நோயாளிகளில் 17 பேர் மட்டுமே வாக்களிக்க விருப்பம்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் கண்காணிப்புடன் தங்களது வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் காலை வாக்குப்பதிவானது தொடங்கிய வாக்குப்பதிவு மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வாக்காளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பான முறையில் வாக்கினை பதிவு செய்கின்றனர்.

vote

அவர்களுக்கு சனிடைசர், முகக்கவசம் ,கையுறை போன்றவைகள் வழங்கப்படுகின்றன. மேலும்  கண்காணிக்கப்பட்டு பின்னர் அவர்கள் வாக்களிக்கின்றனர், தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா தாக்கத்தின் பாதிப்பானது அதிகரித்துள்ளது. மேலும் அனைவரும் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால் அவர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வாக்கு பதிவுக்கு 6 மணி முதல் 7 மணி வரை உள்ள கடைசி ஒரு மணி நேரத்தை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வாக்குப் பதிவு செய்ய விருப்பம் இல்லாத நிலையில்உள்ளனர். மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வரும் 8991 நோயாளிகளில் 17 பேர் மட்டுமே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட தொகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட  94 பேர்களில் ஒருவர்கூட வாக்களிக்க விரும்பவில்லை என சுகாதார துறையிடம் கூறியுள்ளனர்.

From around the web