தொடரும் சோகம்! ஒரேநாளில் 212 பேர் உயிரிழப்பு!மக்கள் அச்சம்!

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோய் என்று கேட்டால் முதலில் நினைவு வருவது கொரோனா நோய்தான். இந்த கொரோனா நோயானது முதலில் சீனாவில் இருந்து உருவானது. அதன் பின்னர் கொரோனா நோயானது உலகமெங்கும் பரவியது. இதனால் இந்திய அரசு கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே முழு ஊரடங்கு திட்டத்தினை நாடு முழுவதும் அமல்படுத்தியது. அதன்படி கடந்த ஆண்டு இறுதி மட்டும் ஊரடங்கு திட்டமானது நடைமுறையில் இருந்தது.

தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் தளர்களுடன் கூடிய ஊரடங்கு ஆனது நடைமுறையில் உள்ளது. அந்த படி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியில் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு திட்டத்தினை அம்மாநில அரசு அறிவித்திருந்தது. மேலும் தமிழக அரசு மாநிலங்களுக்கிடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்தது. அதன்படி தற்போது கொரோனா நோயானது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த ஒரு நாளில் இந்திய நாட்டில் 212 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 46 ஆயிரத்து 957 பேர் கொரோனா பாதிப்பும் கூறியது. ஒரே நாளில் 21ஆயிரத்து 180 பேர் குணம் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் கலந்த சூழ்நிலை நிலவி கொண்டு வருகிறது.