தீபாவளி திருநாளில் சோகம்: மதுரையில் 2 தீயணைப்பு வீரர்கள் பரிதாப பலி!

 

மதுரை ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது

மதுரை விளக்குத்தூண் அருகே உள்ள ஜவுளிக்கடையில் நேற்றிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்

fire

அப்போது நான்கு தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் உள்ளே சென்று தீயை அணைக்க முயற்சித்தபோது, அந்த கட்டிடம் பழைய கட்டிடம் என்பதால் திடீரென இடிந்து விழுந்தது. இந்த் இடிபாடுகளில் சிக்கி கொண்ட நான்கு பேரை மீட்கும் முயற்சியில் இருந்தபோது அதில் இருவர் பலியானதை அறிந்து தீயணைப்பு துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்

உயிரை பணையம் வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் உயிரை வீட்ட தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜெயராஜ் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தீபாவளி திருநாளில் ஏற்பட்ட இந்த சோகம் காரணமாக அந்த பகுதியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

From around the web