வடதமிழகத்தினை தொடர்ந்து தென்தமிழகத்தில் சோகம்!சென்னை வானிலை ஆய்வு மையம்!

தென் தமிழகத்தில் வெப்பநிலையானது அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
 

தமிழகத்தில் கோடை காலம் என்றால் அனைவருக்கும் நினைவு வருவது மே மாதம்தான். மே மாதம் பிறக்க தமிழகத்தில் இன்னும் சில தினங்களே உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. மேலும் பல பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னல்கள் மத்தியில் எரிச்சலுடன் உள்ளனர். இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் ஆனது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் சோகமான தகவலை வெளியிட்டுள்ளது.

sun

அதன்படி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது. மேலும் தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக வெப்பம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலையானது 1 முதல்2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும் சென்னை வானிலை  ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும்  மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகப் பகுதிகளில் கடலோரப் பகுதிகளில் லேசான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது.சில தினங்களுக்கு முன்பு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனக் கூறி வந்த நிலையில் தற்போது வெப்பநிலையானது  அதிகரித்துள்ளதால் மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

From around the web