சோகத்திலும் பெரும் சோகம்: 22 மாவட்டங்கள் கவலை!வானிலை ஆய்வு மையம்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
சோகத்திலும் பெரும் சோகம்: 22 மாவட்டங்கள் கவலை!வானிலை ஆய்வு மையம்.

 தமிழக மக்கள் மத்தியில் கோடை காலம் தொடங்கியதும் மிகப்பெரிய அச்சமும் தொடங்கிவிடும். காரணம் என்னவெனில் கோடைகாலம் ஆரம்பித்து விட்டால் வெயிலின் தாக்கம் ஆனது தமிழகத்தில் இயல்பு நிலையை விட பல பகுதிகளில் அதிகம் காணப்படும். மேலும் ஒரு சில பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படும். இத்தகைய சூழலில் தமிழகத்தில் சில தினங்களாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வெயில் தாக்கும் குறைக்கப்பட்டது. மேலும் ஒரு சில பகுதிகளில் நீர் பற்றாக்குறையும் இந்த கனமழையால் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது வானிலை ஆய்வு சோகமானத் தகவலை வெளியிட்டுள்ளது.

weather

அதன்படி தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். மேலும் இவை அடுத்து இரண்டு நாட்களுக்கு சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம்  ராணிப்பேட்டை வேலூர் போன்ற வட தமிழகம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

மேலும் திருப்பூர் சேலம் நாமக்கல் விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலையிலும் வெப்பநிலை உயரக்கூடும் என்றும் , கடலூர் பெரம்பலூர் அரியலூர் நாகை மயிலாடுதுறை திருவாரூர் திருச்சி கரூர் ஆகிய பகுதிகளில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web