மாதவராவ் சிந்தியா வீடு உள்ள சாலையை திடீரென மூடிய போலீசார்: பரபரப்பு தகவல்

காங்கிரஸ் பிரமுகர் மாதவராவ் சிந்தியா அவர்களின் வீடு உள்ள சாலையை திடீரென போலீசார் மூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது மத்திய டெல்லியில் உள்ள பிஸியான பகுதியில் மாதவராவ் சிந்தியா அவர்களின் வீடு உள்ளது. இந்த சாலையில் திடீரென இன்று காலை ஒரு பள்ளம் ஏற்பட்டது. குகை போன்று ஏற்பட்ட இந்த பள்ளத்தால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக அந்தப் பகுதிக்கு வந்து அந்தச் சாலையை மூட
 

மாதவராவ் சிந்தியா வீடு உள்ள சாலையை திடீரென மூடிய போலீசார்: பரபரப்பு தகவல்

காங்கிரஸ் பிரமுகர் மாதவராவ் சிந்தியா அவர்களின் வீடு உள்ள சாலையை திடீரென போலீசார் மூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

மத்திய டெல்லியில் உள்ள பிஸியான பகுதியில் மாதவராவ் சிந்தியா அவர்களின் வீடு உள்ளது. இந்த சாலையில் திடீரென இன்று காலை ஒரு பள்ளம் ஏற்பட்டது. குகை போன்று ஏற்பட்ட இந்த பள்ளத்தால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக அந்தப் பகுதிக்கு வந்து அந்தச் சாலையை மூட உத்தரவிட்டனர். இதனையடுத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலையின் இருபக்கமும் மூடப்பட்டது. எனவே இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் எதனால் என்பது குறித்து புவியியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சாலையில் ஏற்பட்ட பள்ளம் இப்போது வரை மர்மமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web