டிராக்டர் பேரணி: ராகுல்காந்தி அருகே உட்கார்ந்திருந்தவருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

 

இந்த கொரோனா நேரத்திலும் சுறுசுறுப்பாக அகில இந்திய அளவில் அரசியல் செய்வது ராகுல் காந்தி மட்டுமே என்பது அவருடைய கடந்த சில நாட்களில் நடவடிக்கையில் இருந்து தெரியவருகிறது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான சம்பவத்துக்கு கொந்தளித்த ராகுல்காந்தி அதன் பின் தற்போது வேளாண் மசோதாவை கையில் எடுத்துள்ளார் 

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அரியானா மாநிலத்திற்கு ராகுல் காந்தியும் பஞ்சாப் முதல்வரும் டிராக்டர் பேரணியில் சென்ற நிலையில் அவர் ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பஞ்சாபில் விவசாய சட்டத்திற்கு எதிரான டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொள்வதற்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் மேடையில் உட்கார்ந்திருந்த பல்பீர் சிங் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ராகுல் காந்திக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web