மொத்தம் 1.74 லட்சம்! ஒரே நாளில் 1185 மரணம்!அதிகரிக்கும்  பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  1185 பேர் கொரோனாவால் பாதிப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது!
 
மொத்தம் 1.74 லட்சம்! ஒரே நாளில் 1185 மரணம்!அதிகரிக்கும் பலி!

மக்கள் மத்தியில் தற்போது கண்ணுக்கு தெரியாமல் வளர்ந்துள்ள ஒரு ஆட்கொல்லி நோய் கொரோனா. கொரோனா மனிதனின் கண்ணுக்கு தெரியாமல் மனிதன் உடம்புக்கு சென்று இறுதியில் மரணத்திற்கு அழைத்துச் செல்கிறது. இதனால் பல நாடுகளும் கொரோனா நோயை கண்டு மிகுந்த வேதனையில் இருந்தனர். குறிப்பாக இந்தியாவின் ஆண்டின்  ஆரம்ப கட்டத்தில் கொரோனா நோயின் தாக்கமானது வந்தது தெரியவந்தது. ஆனால் கடந்த ஆண்டின் இறுதிக்குள் இந்நோயின் தாக்கம் இந்தியாவில் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

corona

தற்போது கொரோனா நோயின் தாக்கம் பெற்று மீண்டும் வந்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் குறிப்பாக இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் மகாராஷ்டிரம் தமிழகத்திலும் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவில் நோயின் தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் 1185 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் உயிர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

மேலும் இதுவரை நோயின் தாக்கத்தினால் இந்தியாவில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 308 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா நோயின் தாக்கம் அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் அதற்கான பலிகளும் வேகமாக அதிகரித்து மக்களை மிகப் பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது. இதனால் மக்கள் மிகுந்த பயத்துடனும் அச்சத்துடன் வாழ்கின்றனர் என்பது மிகவும் கொடுமையான செய்தியாக காணப்படுகிறது.

From around the web