டீக்கடையில் இருந்து டீ குடித்து வாக்கு சேகரித்த டார்ச் லைட் சின்ன வேட்பாளர்!

மக்கள் நீதி மய்யம் சார்பில் எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் பிரியதர்ஷினி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்!
 

சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.மேலும் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. இதில் தமிழகத்தில் எந்த ஒரு கூட்டணி 234 தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்து உள்ளது நாம் தமிழர் கட்சி. இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க உள்ளது மக்கள் நீதி மய்யம் .

mnm

இக்கட்சியின் தலைவர் உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். அத்தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் எதிர்த்தும் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் நீதி மய்யம் சார்பில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் பிரியதர்ஷினி. அதற்காக அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார், அவர் தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

 தற்போது இன்று காலை முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அவர் அங்குள்ள டீ கடையில் சென்று டீ குடித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். மேலும் அவர் வணிக நிறுவனம்,ஆட்டோ ஓட்டுனரிடம் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும் அவர் இன்று காலை முதலே வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வந்தார்

From around the web