நாளை முழுமையான முழு ஊரடங்கு: ஞாபகப்படுத்திய காவல்துறை ஆணையர்

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு என சமீபத்தில் அறிவிப்பு வந்தது தெரிந்ததே. இதனையடுத்து நேற்று முதல் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த முழு ஊரடங்கில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை
 

நாளை முழுமையான முழு ஊரடங்கு: ஞாபகப்படுத்திய காவல்துறை ஆணையர்

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு என சமீபத்தில் அறிவிப்பு வந்தது தெரிந்ததே. இதனையடுத்து நேற்று முதல் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த முழு ஊரடங்கில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை அத்தியாவசியமான கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. ஆனால் நாளை மற்றும் வரும் 28ஆம் தேதி ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த அத்தியாவசியமான கடைகள் கூட திறக்கப்பட மாட்டாது என்றும் முழுமையான முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

இதனை அடுத்து நாளை முழுமையான முழு ஊரடங்கு என்பதை தமிழக காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் அவர்கள் பொதுமக்களுக்கு ஞாபகப்படுத்தியுள்ளார். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை எந்த தளர்வும் கிடையாது என்றும் இன்று நள்ளிரவு முதல் முழு நேர பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு செய்துள்ளார்.

இதனையடுத்து இன்றே தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளவும் என்றும் நாளை முழுமையான முழு அளவில் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது

From around the web