மீண்டும் களமிறங்கும் டோக்கன்! நாளை முதல் டாஸ்மார்க் கடைகளில்!

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் வினியோகம் செய்யப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது!
 
மீண்டும் களமிறங்கும் டோக்கன்! நாளை முதல் டாஸ்மார்க் கடைகளில்!

தற்போது மக்கள் மத்தியில் காணப்படுகின்ற ஆட்கொல்லி நோயான கொரோனாக்கு எதிராக பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்துள்ளன. தலைநகர் டெல்லியில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை அறிவித்திருந்தார். மேலும் தமிழக அரசின் சார்பில் சில தினங்களுக்கு முன்பு பல கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும் முக கவசம் அணிவது கட்டாயம் என்று விதித்து இருந்தது.

tokens

மேலும் இவ்விதிகளை மீறுவோர் மீது அபராத தொகையும் வழங்கப்படும் என்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அபராதத் தொகைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை மதுரையில் அபராத தொகையை ஆனது  விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைபடுத்த உள்ளது.அதற்கு உதவும் விதமாக போக்குவரத்து கழகம் சார்பிலும் சில சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மிகவும் அதிகம் வருவாய் காணம் தொழிலாக காணப்படுகின்ற டாஸ்மாக் நிர்வாகமும் சில விதிகளை விதித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் முறையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக மீண்டும் டோக்கன் முறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது .மேலும் டாஸ்மாக் கடைகளில் டோக்கன்  வழங்கும்  நேரத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் மாலை 4 மணி வரை மட்டுமே டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

From around the web