திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு டோக்கன்!

 
tirupathi

இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு டோக்கன் வழங்கப்பட உள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே இன்று முதல் சில நாட்களுக்கு அனுமதி என்றும் ஒரு சில நாட்களுக்குப் பின்னர்தான் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களுக்கு அனுமதி என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

இன்று சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் அலிபிரியில் உள்ள பூதேவி மையத்தில் இலவச தரிசனத்திற்காக டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது தினமும் 2 ஆயிரம் பேர்களுக்கு இலவச தரிசனத்திற்காக டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் பக்தர்கள் டோக்கன்களை பெறுவதற்கு ஆதார் கார்டை எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் கொரோனா வைரஸ் வழிமுறைகளைப் பின்பற்றி இலவச தரிசனத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூபாய் 300 சிறப்பு தரிசனத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்

From around the web