இன்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை: சசிகலா விவகாரம் பேசப்படுமா?

 

இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் அவர்கள் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலை ஆன நிலையில் நாளை மறுநாள் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் சென்னை திரும்பியவுடன் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் இருக்கும் என்றும், குறிப்பாக அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அணி மாறுவார்கள் என்று கூறப்படுகிறது.

ops eps

அதுமட்டுமின்றி சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடப் போவதாகவும் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாதான் என்றும் டிடிவி தினகரன் கூறிவருகிறார். மேலும் அதிமுக கட்சி கொடியை சசிகலா தனது காரில் நாளை மறுநாள் சென்னை வரும்போதும் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 8ஆம் தேதி சசிகலா தமிழகம் வர உள்ள நிலையில் அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் சசிகலா விவகாரம் குறித்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனையை அடுத்து கூட்டாக இருவரும் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web