நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி!

 

2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி தினம் என அறிவுறுத்தப்படுகிறது 

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் நிலையில் 2021-22 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது 

இந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் இன்று நள்ளிரவு 11.55 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஏப்ரல் 12ஆம் தேதி இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் ஹால் டிக்கெட் கிடைக்கும் என்பதும் நீட் தேர்வு முடிவுகள் மே 31ஆம் தேதி வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

neet

முதலில் விண்ணப்பம் செய்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்பதால் முன்கூட்டியே மாணவர்கள் விண்ணப்பம் செய்வது சிறந்தது என்று அறிவுறுத்தப்படுகிறது

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது https://nbe.edu.in மற்றும் https://www.natboard.edu.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்

From around the web